துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தையின் கடைசி தகுதி சுற்று நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் 5ஆவது இடத்திலிருந்த இந்திய அணி நேரடியான 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் உலக தர வரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 18ஆவது இடத்திலிருக்கும் உக்ரெய்னுடன் மோதியது. இதில் 3-5 என்ற விகிதத்தில் உக்ரெய்னிடம் தோல்வியடைந்தது இந்தியா. இந்தப் பிரிவில் அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெறும். ஆனால், காலிறுதியிலேயே இந்திய அணி தோல்வி கண்டதால், அந்த வாய்ப்பை இழந்தது. ஆனால், தர வரிசையின்படி இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் தகுதி பெற இன்னுமொரு வாய்ப்பு இருக்கிறது.