July 8, 2025
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  திருவிழாவை புறக்கணிக்கும் இந்தியர்கள்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கும் இந்தியர்கள்..!

Feb 24, 2024

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று(23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மேலும் இவ்  திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியவை  இடம்பெற்றதுடன் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று  (24) காலை 7 மணிகய்ளவில்  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து  4354 பக்தர்கள்  கலந்து கொண்டுள்ளதுடன் குறிப்பாக இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இத் திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் , ஜனாதிபதியின் செயலாளர்கள் , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் , உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *