வத்தேகம, எல்லனகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவர்கள் நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொவிபல மற்றும் விலஒய பிரதேசத்தைச் சேர்ந்த 47, 68 வயதுடையவர்கள் ஆவார்.
சந்தேக நபர்களிடமிருந்து 301 கஞ்சா செடிகள் மற்றும் 2 உள்நாட்டுத் துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் எதிமலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.