கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், இவ்வாண்டின் ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான் பாரிந்த கொட்டுகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்களில் பெரும்பாலானவை, விபத்துக்களில் காயமடைந்தவை. இவர்களது சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு சடலங்களை விரைவாக அகற்ற வேண்டுமென கடந்த காலங்களில் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும் உரிமையாளர்களை விரைவாக அடையாளம் காண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறிது காலத்திற்கு முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாக, மேற்படி பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்களை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்று விசாரணை நடத்துமாறு, கொழும்பு தெற்கு மரண விசாரணை அதிகாரி பாரிந்த கொட்டு கொட கேட்டுக்கொண்டார்.