சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், கடந்த வருடம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நாம் வங்குரோத்து நாடாக முத்திரை குத்தப்பட்டிருந்தோம்ன் இருப்பினம் இவ் வருட சுதந்திர தினத்திற்குள் அந்த நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய போக்கு முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், அதே பாதையில் தொடர்ந்து செல்வதற்கு இந்த சுதந்திர தினத்தில் நாம் தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பெருமைமிக்க பணிகளுக்கு இயன்றளவு ஆற்றலை வழங்குமாறு இலங்கையிலும் வெளியிலும் வாழும் அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.