January 13, 2026
கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது..!
News News Line Top Updates இலங்கை அரசியல்

கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது..!

Mar 2, 2024

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் நேற்று (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரின் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமானதுடன் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சடலம் குறித்து மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *