மலேசிய பிரஜை ஒருவர் நேற்று மாலை உனவடுனா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
61 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
Post Views: 2