யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து, புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலிற்கு சென்ற 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி, கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து, புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக சென்ற வேளை அவர் நேற்றுக் காலைவரை கரை திரும்பவில்லை.
இந் நிலையில், மீனவர்களால் தேடுதல் நடத்தப்பட்டபோது அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடலில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Post Views: 2