கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றைய தினம் பிற்பகல் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் குடமுருட்டி குளத்தின் கீழ் நெற்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் பள்ளிக்குடா மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கடலரிப்பு மற்றும் இறங்கு துறை இன்மை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்திருந்தார்.
அவர் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு இருதரப்பும் இனங்கியுள்ளதாக தெரிவித்திருந்தாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2