நாவிக நெவி பண்டார என்ற பெயர் வழங்கப்பட்ட கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
இன்று (08) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை கன்தேகெதர பகுதியைச் சேர்ந்த கே. எம். டி. எஸ்.பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேறு எந்த விபரங்களும் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.