பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன் இனம் உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.
குறித்த குழுவினர் பாணந்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாணந்துறை கடலில் செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post Views: 3