கடலில் மிதந்த 100 கிலோகிராம் போதைப்பொருள் !
மேல் மாகாண காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இன்று (18) காலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய சுமார் 100 கிலோகிராம் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பார்சல்களை மீட்டுள்ளனர்.
பேருவளையிலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த போதே இதனை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 20–25 கிலோகிராம் அளவுள்ள சந்தேகமான ஒரு பார்சல் பெந்தோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
![]()