அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர்  நேற்றைய தினம் (24) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி  குறித்த மாணவி உறவினர்களுடன் அம்பாந்தோட்டைக்குச் சுற்றுலா சென்ற வேளை  கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  குறித்த மாணவியின் சடலம், அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here