கட்சியையும், தலைமையையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசா எச்சரித்துள்ளார்.
மேலும் இது குறித்து சஜித்பிரேமதாசா தெரிவிக்கையில் , “யாருக்கு கட்சி உறுப்புரிமை வழங்க வேண்டும் என்று எவரும் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை.
எனக்கு அறிவுரை கூற முயல்பவர்களை நான், புறக்கணித்து விடுவேன். கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என கூறியுள்ளார்.
இது பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை எச்சரிக்கும் வகையிலேயே சஜித் தெரிவித்துள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.