கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான சலுகைக் கடன் திட்டத்தை மீள வழங்குவதற்கு ஜெய்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலகுக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 170 பில்லியன் ரூபா ஜெய்கா நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது.
இந்த முனையத்தின், கட்டுமானப் பணிகளின் பின்னர் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை வருடாந்தம் 6 மில்லியனிலிருந்து 16 மில்லியனாக அதிகரிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post Views: 2