இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் விதிமுறைப்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய நடைமுறை பயணிகள் சேவைகளை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தை சீராக நடப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய நடைமுறையில் பயணிகள் பதிவு செய்யும் காலம் 3 மணி நேரத்திற்கு முன்பு அமைந்திருந்தது.






