கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(15) அதிகாலை 65 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.