சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்திருந்த இலங்கைப் பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2