அமேசான் வனப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிறேசில் மடோ கிராஸ்ரோ மாகாணம், அமேசானியன் நகரிலிருந்து ராண்டனொ பொலிஸ் நகருக்கு பறந்துகொண்டிருந்த விமானம், அமேசான் வனப் பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து திடீரென தரையில் விழுந்துள்ளது.
தரையில் விழுந்த விமானம் முழுவதுமாக தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன் குறித்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.