வென்னப்புவ பிரதேசத்தில் கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக மனைவியின் உடலில் கணவன் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.