குருநாகலில் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார (38 வயது) என்பவராகும். இவ்வாறு, கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்படட பெண் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையில் அவர்களது வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுடன், அதன் போது மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.
உயிரிழந்த நபரின் கழுத்து மற்றும் இடது காலில் வாளினால் தாக்கப்பட்ட நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்வர் அங்கு உயிரிழந்துள்ளார்.