கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில், குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந் நிலையிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்களும் காணப்பட்டுள்ளதோடு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போயுள்ளது, அத்துடன் வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதானால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்