கண்டி, மெனிக்ஹின்ன பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் 50,000 மதன மோதகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மருத்துவரின் சிபாரிசு இல்லாமல் பாடசாலை மாணவர்கள் இங்கிருந்து மதன மோதக மாத்திரைகளை வாங்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றத்தடுப்பு பிரிவின் பிரதான பரிசோதகர் சிந்தக பண்டார உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதுடன் இந்த மதன மோதக உருண்டைகளின் பெறுமதி சுமார் 02 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.