February 7, 2026
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – நால்வர் பலி
Top Updates புதிய செய்திகள்

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – நால்வர் பலி

May 6, 2024

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதை டொரான்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் 60 வயதான மணிவண்ணன், 55 வயதான மகாலட்சுமி என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த மணிவண்ணனின் மகன் கோகுல்நாத் மற்றும் மருமகள் அஷ்விதா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கோகுல்நாத்தின் மகன் ஆதித்யாவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் விசிட் விசாவில் கனடா சென்றுள்ளனர்.

இந்நிலையில், “இந்திய பிரஜைகளின் துயரமான இழப்புக்கு” என தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இவர்கள் பயணித்த வாகனத்துடன் மோதிய மற்றைய வாகனத்தில் இருவர் பயணம் செய்துள்ளதுடன், அதன் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய சக பயணியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *