December 13, 2025
கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!

Feb 27, 2024

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் புற்றுநோய்த் தாக்கத்தினால் மரணிப்பவர்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விட, 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியிலேயே இப்புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும், ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் நோயாளர்களை குணப்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இளையோர் மத்தியில் அதிகளவில் புற்று நோய் ஏற்படுவது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *