Tamil News Channel

கனடாவில் புகலிடம் கோரும் தமிழர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

24-66799db99e47e

கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விரைவாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகளை அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலனை செய்ய இதுவரை 18 மாத காலங்கள் எடுக்கப்படுகின்றன. எனினும் அதனை 9 மாதங்களாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் Quebec மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts