கனடாவில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
கனடா, தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக பில் சி-3 எனும் புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச செய்திகள் தெரிவிப்பதன்படி,
இந்த சட்ட மாற்றத்தால் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானவர்கள் பலனடையவுள்ளனர்.
கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப், நீண்ட காலமாக நிலவி வந்த குடியுரிமை தொடர்பான சிக்கல்களை இந்த சட்டமூலம் சரிசெய்யும் என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பிறந்தோர்கள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு இந்த சட்டம் முக்கிய நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முந்தைய சட்டங்களால் குடியுரிமை நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
![]()