யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.
ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் நேற்றையதினம்(12) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.