July 16, 2025
கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை..!
News Updates

கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை..!

Mar 23, 2024

கனடாவின் சில பகுதிகளுக்கு 50சென்ரிமீற்றர் வரை பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையத்தினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றாரியோவிலும் பனிப்பொழிவு நிலைமை அவதானிக்க கூடிய மட்டத்தில் இருக்குமெனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் ஓட்டுநர்கள் தங்கள் விளக்குகளை இயக்கவும்,வாகனங்களுக்கிடையிலான பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் நினைவூட்டப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *