இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், இந்தியப் பெருங்கடலில் 500 கிலோ போதைப்பொருட்களுடன் இரண்டு மீன்பிடிக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்தக் கப்பல்கள் மூலம் போதைப்பொருன் கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில், இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக ஏறியதால், தோராயமாக 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இரண்டு படகுகளும், அவற்றின் பணியாளர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.