January 13, 2026
கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!
News News Line Top Updates புதிய செய்திகள்

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

Apr 16, 2024

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா(Costa Deliziosa) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா , ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15)வருகை தந்துள்ளனர்.

அவர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடுவதாகவும் மேலும் இந்த பயணிகள் கப்பல் மாலைதீவு நோக்கி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *