நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமரன் திரைப்படம் வருகிற ஒக்டோபர் 31ம் திகதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அமரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் காஷ்மீரில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.
இது தவிர அதில் சர்ப்ரைஸ் பாடல் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது இரசிகளுக்கு பெரும் ஆர்வத்தையும் ஏற்பத்தியுள்ளதுடன், தேசபக்தி பாடலான இதை கமல்ஹாசன் தான் பாடியும் இருக்கின்றார்.
‘போர் செல்லும் வீரன்… ஒரு தாய் மகன் தான்… நம்மிள் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.. பாரடா’ என்கிற உணர்வுப்பூர்வமான வரிகளுடன் கூடிய அப்பாடல் அந்த மேக்கிங் வீடியோவில் ஒரு ஹைலைட்டாக உள்ளது.