கம்பஹா தொடருந்து நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருவதாவது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு தேரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 220 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களை கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.