மேல் மாகாண கம்பஹா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி லலின்த கமகே நியமனம் பெற்றுள்ளார்.
அத்துடன் கடமை பொறுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலக பணிமனையில் அண்மையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.எஸ். சத்தியவான், மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.டபிள்யு.எஸ். கித்சிறி உள்ளிட்ட பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டு புதிய மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.