நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலைமை நிலவுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர தெரிவித்தார்.
எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


