மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார் .
இவர் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே பாதை மாறி வந்த வேன் குறித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
இச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது வேனின் சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் கரடியனாறு பொலிஸார் வேனின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2