நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இன் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கென்று மாபெரும் ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. சினிமாவில் உச்சியில் உள்ள விஜய், அடுத்தக்கட்டமாக அரசியலில் களமிறங்கி உள்ளார்.
அரசியலில் களமிறங்கி உள்ளதால் தனது கடைசி திரைப்படமான தளபதி 69-ல் விஜய் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால் ஹெ.ச் வினோத் இந்த திரைபடத்தை இயக்க உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். நடிகர் விஜய்யின் மூத்த மகன் சஞ்சய் சமீபத்தில் இயக்குநராக அறிமுகமானார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சஞ்சய் கருப்பு நிற கோட் சூட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் சஞ்சய், கோட் சூட்டில் அச்சு அலசாக நடிகர் விஜயை போலவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.