
கரும்புள்ளிகளை போக்க எளிதான அழகு குறிப்புகள்.!
கோடைக்காலம் வந்தாலே சரும பிரச்சினைகள் உண்டாகி பெரும் சோதனைகளை உள்ளாக்குகின்றன.இதனால் கரும்புள்ளிகள் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டே சரும பிரச்சினையை தடுக்க முடியும்.
மேலும் கரும்புள்ளிகள் தோன்றினால் எவ்வாறு சருமத்தை அழகாக பராமரிக்க முடியும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியவை
எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து கொட்டன் துணியில் நனைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பொலிவடையும்.
பப்பாளி பழத்தை தோல், விதை நீக்கி மசித்துவிட்டு அதனுடன் தேன் கலந்து குழைத்து முகத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழுக்குகள் நீங்கி பொலிவு தரும்.
முகத்தில் வெண்ணெய் தடவி, வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடித்து முகத்தை கழுவி வர முகச்சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையும்