July 14, 2025
கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
மருத்துவம்

கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

Jul 1, 2024

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க ஆரஞ்சுபழம் ஒன்று போதும்.

1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு மற்றும் 2 ஸ்பூன் தயிர் எடுத்துக் கலந்து கண்களுக்கு அடியில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.

இதனை வெளியே செல்வதற்கு முன் பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வர கண்களுக்குக் கீழே உள்ள சருமம் புத்துணர்ச்சியாக தோன்றும்.
1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றை மென்மையான பேஸ்ட் போல் கலக்கவும்.

இதை கண்களுக்குக் கீழே தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை விட்டுவிட வேண்டும்.

பின்னர் தண்ணீரில் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது ரோஸ் வாட்டரால் முகத்தை கழுவலாம்.

2 ஸ்பூன் ஆரஞ்சு சாற்றை எடுத்து சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து மற்றும் சந்தன தூள் சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் கலக்க வேண்டும்.

இதை கண்களுக்குக் கீழே தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் கழுவினால் பிரகாசமான கண்களை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *