கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் மேடையிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்த பிரபாஸை கூட்டமாக சேர்ந்து கலாய்த்துள்ளனர்.
பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் அச்சன் ஆகியோர் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் “கல்கி 2898 AD”.
இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் நட்சத்திரங்கள் இணைந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தீபிகாவும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த சமயத்தில் தீபிகா மேடையில் பேசி விட்டு கீழே இறங்கிய போது நடிகர் பிரபாஸ் ஓடிச்சென்று கையை கொடுத்து இறக்கி விட்டுள்ளார்.
தீபிகா இறங்கிய போது அமிதாப் பச்சன் எழுந்து வந்து பிரபாஸை தாங்கிய படி கலாய்த்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பிரபாஸின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.