கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும், நன்றாக உடற்பயிற்சி செய்யவும் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள்.
கர்ப்பிணிகள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, தங்கள் நிம்மதியான தூக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்குவது அவ்வளவு எளிதல்ல.
கர்ப்பிணிகள் தூங்குவதற்குள் பலவிதமான இடர்ப்பாடுகள் ஏற்படும். ஆனாலும் சில கர்ப்பிணிகள் எளிதாகத் தூங்கி விடுவார்கள்.
கர்ப்பிணிகள் தூங்காமல் இருக்கவும் கூடாது; அளவுக்கு அதிகமாகவும் தூங்கக் கூடாது.
கர்ப்பிணி எவ்வளவு தூங்க வேண்டும்?
தூங்கும் போது மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்றவை குறைய தொடங்கும்.
கர்ப்பத்தின் 9 மாதங்கள் வரை தூக்கம் மிகவும் அவசியம்.
இறுதி மூன்று மாதங்களில் தூக்கம் கண்டிப்பாக தேவைப்படும். இரவு நேர தூக்கம் போதாத போது பகல் நேரங்களில் சில மணி நேரம் தூங்குவது நல்லது.
கர்ப்பிணி தினமும் இரவு நேரங்களில் 7-9 மணி நேரம் வரை தூங்க வேண்டும். சோர்வு இருந்தால் தூக்கம் போதவில்லை என்று அர்த்தமாக இருக்கலாம்.
தூங்கும் போது பக்கவாட்டில் இரண்டு கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குங்கள். அப்போது நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.