உலகளாவிய ரீதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பலர் பலியாகியுள்ளதோடு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக கல்குவாரியிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, கற்களுக்கு இடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.
மேலும் குறித்த பகுதியில் பெய்து வரும் கடுமையான மழையினால் மண்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அப் பகுதியிலுள்ள பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.