கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1.3 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதை மாத்திரைகள்!

0
3

கல்பிட்டியில் கடற்படையினரால் மூன்று  படகுகள் மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சட்டவிரோத போதை மாத்திரைகள் நேற்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள விசேட பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களாகவும், முகத்துவாரம், குரக்கன்ஹேன, வன்னிமுந்தல் மற்றும் சின்ன குடியிருப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் அறியப்படுகிறது.

கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இந்தப் போதை மாத்திரைகள் மற்றும் படகுகள் கைப்பற்றப்பட்டு, மொத்த பெறுமதி 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here