மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வை முன்னிட்டு இந்தியா இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலையத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் 20 சுவாமிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (17) மாலை திருச்செந்தூர் ஆலையத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இதனை தொடர்ந்து இந்தியா இலங்கை ஆதின மடாதிபதிகள் சந்நியாசிகள் தலைமையில் கலசங்களிலுள்ள புனித தீர்தங்கள் மற்றும் 108 முளைப்பாரிகள் நாதேஸ்வர வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள பிரபலமான பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்தங்களும் கொண்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை எண்ணைய்காப்பு சாத்தலை தொடர்ந்து 20 ம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்தியா இலங்கை பல ஆதின மடாதிபதிகள் முதல் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.