
கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு..!
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பல்வேறு துறைசார் ஊழியர்களும் இன்று(25.06) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (25.06) 55 ஆவது நாளாகவும் தொடர்கிறது. பணிப்பகிஷ்கரிப்புடன் பல பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் அரச சம்பளக் குழுவிற்கும் இடையில் இன்று(25.06) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொருளாதார நீதியை நிலைநாட்டுமாறு கோரி அரச நிறைவேற்று அதிகாரிகளும் இன்றும் நாளையும் சுகவீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.