Thursday, March 12, 2026

கல்வி அமைச்சின் அதிரடித் திர்மானம்..!

Must Read

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கமைய கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களை உயர்தரத்திற்காக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்புகளில் குறிப்பிட்ட பாடத்திட்டம் உரிய பாடசாலையில் கற்பிக்கப்படாவிடின், அந்த பாடத்திட்டம் கற்பிக்கப்படும் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights