களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பிலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முற்பட்ட போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.