சீத்தாவக்க அவிசாவளை சுற்றுலா வலயம் சூழலுக்கு இயைவான கவர்ச்சிகரமான சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பில் நடைபெற்ற ஈரநிலப் பூங்கா மாநாட்டுடன் இணைந்ததாக இப்பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் தனித்துவமான ஈர வலய சுற்றுலாத்தளமாக சீத்தாவக்க பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சர்வதேச ஈரநில ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய உச்சி மாநாட்டிற்கு இணைந்ததாக சீதாவக்க, அவிசாவளை சுற்றுலா வலயங்கள் சூழலுக்கு உகந்த சுற்றுலா தளமாக பெயரிடப்பட்டுள்ளது.
ஈரநில உச்சி மாநாட்டிற்காக நாட்டுக்கு வந்திருந்த 15 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஒடிஸி ரயிலில், சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளங்களுக்கு ரயிலில் விசேட பயணம் மேற்கொண்டனர்.இவர்களின் பயணத்தின்போது கொழும்பு கோல்ப் மைதானம் மற்றும் கித்துல்கல மலை சுற்றுச்சூழலும் அவதானிக்கப்பட்டது.
இதையடுத்தே நிலையான சுற்றுலாத்தளமாக இப்பிரசேம் பிரகடனப்படுத்தப்பட்டது.