காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

0
2
An Israeli soldier directs a tank at a staging area near the border with the Gaza Strip, in southern Israel, Tuesday, July 1, 2025. (AP Photo/Ariel Schalit)

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை “இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு” இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) தளங்களில் உணவுப் பொட்டலங்களுக்காகக் காத்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவ மையமான அல்-ஷிஃபாவின் அதிகாரிகள், இஸ்ரேலின் முற்றுகையின் மத்தியில் மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்து போனதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் “மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர்” என்று கூறியுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 56,647 பேர் கொல்லப்பட்டதாகவும், 134,105 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here