காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து – ட்ரம்ப் தலைமையில் போர் நிறுத்தம்!
இஸ்ரேல் – காசா இடையேயான நீண்டகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “காசா அமைதி ஒப்பந்தம்” இன்று அதிகாரபூர்வமாக கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கையெழுத்தை இட்டுள்ளார்.
ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பினரும் போரை நிறுத்தி, பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமைதி ஒப்பந்த கையெழுத்து விழா எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் (Sharm El-Sheikh) நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல் சிசி தலைமையேற்றார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மேலும் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இது மத்திய கிழக்கு பகுதியில் நீண்டநாள் பதட்ட நிலையை சமாதான திசைக்கு மாற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
![]()